கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு கோபுல்லு எனும் கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியில் மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் பிந்துவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பிந்துவின் கள்ளக் காதலை அறிந்த உறவினர்கள் அவரை வன்மையாக கண்டித்தனர். கள்ளக்காதல் விவகாரம் வெளியே கசிந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
நேற்று முன்தினம் இருவரும் திருவண்ணாமலை செல்வதற்காக பேருந்தில் ஏறினர். பேருந்து ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிக்காரிமேட்டில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தது. பேருந்திலிருந்து கீழே இறங்கிய இருவரும் தங்கள் கையில் வைத்திருந்த விஷத்தை அருந்தினர்.
விஷத்தின் வீரியத்தால் உடனடியாக மயங்கி விழுந்தனர். இருவரையும் கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். துருதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இருவரும் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த குருபரப்பள்ளி காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment