எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 21, 2019

நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா?


இந்த நவீன காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது காணாமல் போன விஷயமாகவே உள்ளது.




தற்போது எல்லாம் உணவில் ஊட்டச்சத்துகளை எடுப்பதை விட்டு விட்டு மாத்திரை வடிவில் தான் ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். கால்சியம், இரும்புச் சத்து குறைபாடு இப்படி எல்லாவற்றிற்கும் மாத்திரை தான். ஆனால் இப்படி கால்சியம் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதா? கண்டிப்பாக கிடையாது. இயற்கையாகவே 1000-1200 மில்லி கிராம் அளவு கால்சியம் அடங்கிய உணவுகளான பிரக்கோலி, டோஃபு, மோலாஷஸ், எள் விதைகள் மற்றும் கோலார்டு க்ரீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வரலாம். அதிகப்படியான கால்சியம் கண்டிப்பாக உங்கள் எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது கிடையாது.




 அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் கலப்பதால் ஏகப்பட்ட பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. ஹைபர் கால்சிமா ஹைபர் தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஹைபர் கால்சிமாவை ஏற்படுத்துகிறது. இந்த நிலை ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்து விடும். கால்சியம் அதிகமானால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தற்போது பார்க்கலாம்.

ஆயுளை குறைக்கும் அபாயம் ஸ்வீடிஷ் ஆய்வுப்படி அதிக கால்சியம் ஆயுளை குறைக்கக் கூடும். 61, 433 பெண்கள் தங்கள் 19 வது வயதிலேயே இறப்பை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தான் என்று ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது.



ஆயுளை குறைக்கும் அபாயம் 

 ஸ்வீடிஷ் ஆய்வுப்படி அதிக கால்சியம் ஆயுளை குறைக்கக் கூடும். 61, 433 பெண்கள் தங்கள் 19 வது வயதிலேயே இறப்பை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தான் என்று ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறத

அதே நேரத்தில் பெண்களின் உணவுப் பழக்கம், புகைப் பழக்கம் போன்றவை உள்ளவர்கள் 1400 மில்லி கிராம் அளவு கால்சியம் எடுத்துக் கொண்டாலே இருமடங்கு இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 40% இறப்பு கூட இதில் நேரலாம். நீங்கள் சரியான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டாலே போதும் கால்சியம் பற்றாக்குறையை போக்கி விடலாம். தேவையில்லாமல் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.


சிறுநீரக கற்கள் 

அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் இருக்கும் போது சிறுநீரகம் அதை வடிகட்ட கஷ்டப்படும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தாகம் எடுக்கும். சிறுநீரக கற்களும் உருவாகும். 2015 ல் நடத்திய ஆய்வின் படி கால்சியம் மாத்திரைகள் சிறுநீரக கற்களை உருவாக்குகிறது அதன் படி பார்த்தால் கிட்டத்தட்ட 6050 நோயாளிகள் இந்த சிறுநீரகக் கற்களால் பாதிப்படைந்துள்ளனர்

இந்த ஆராய்ச்சியின் போது 2061 பேர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக சிறுநீரக பரிசோதனை எடுக்கப்பட்டது. பிறகு 1486 நோயாளிகளுக்கு கால்சியம் மாத்திரைகளும், 417 பேர்களுக்கு விட்டமின் டி மாத்திரைகளும் 158 பேர்களுக்கு மாத்திரை எதுவும் கொடுக்காமலும் ஆராய்ச்சி செய்தனர்.


கால்சியம் மாத்திரைகள்

கால்சியம் மாத்திரை எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு சீக்கிரமாகவே சிறுநீரகக் கற்கள் வளர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் விட்டமின் டி எடுத்துக் கொண்டவர்களுக்கு சிறுநீரகக் கற்களின் வளர்ச்சி குறைந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே விட்டமின் டி மாத்திரைகள் சிறுநீரக கற்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

கால்சியம் எலும்புக்கு வலிமையை தர உதவுகிறது. அதே மாதிரி நரம்புகளுக்கு சிக்கலை கடத்தவும், தசைகளை சுருங்கி விரியச் செய்யவும் உதவுகிறது. எனவே அதிகப்படியான கால்சியம் இதய தசைகளை வேகமாக துடிக்க வைக்கிறது என்று ஆய்வக தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனவே உங்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. இல்லையென்றால் இதனால் இறப்பு கூட நேர வாய்ப்புள்ளது.

சிறுநீரக செயலிழப்பு 

சிறுநீரக செயலிழப்பு அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் கலந்து சிறுநீரகத்திற்கு அதிக வேலையை கொடுக்கிறது. இதனால் சில நாட்களிலேயே சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கால்சியம் மாத்திரைகளை எடுப்பதை நிறுத்தி விட்டு இயற்கையாகவே கால்சியம் சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment

அதிகம் படிக்கப் பட்டவை : Popular Posts